அவலூர்பேட்டையில் நவராத்திரி உற்சவம்
ADDED :3288 days ago
அவலுார்பேட்டை : அவலுார்பேட்டை ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா நடக்கிறது. மேல்மலையனுார் தாலுகா, அவலுார்பேட்டை ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா, கடந்த 3ம் தேதி துவங்கியது. முதல் நாள் ஆதிபராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாரதனை நடந்தது. தொடர்ந்து தினசரி குங்கும அலங்காரம், காமாட்சி, மகாகாளி, அன்னபூரணி, காயத்ரி, துர்கா, சரஸ்வதி, மகாலட்சுமி, சந்தன காப்பு உள்ளிட்டஅலங்காரத்தில் விழா நடக்க உள்ளது. வரும் 12ம் தேதி இரவு 7:00 மணிக்கு மகாசக்தி ேஹாமமும், சந்தன காப்பு அலங்காரமும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.