முதல்வர் நலம் பெற தொடர் யாக பூஜை
ADDED :3331 days ago
பள்ளிபாளையம்: முதல்வர் விரைவில் நலம் பெற வேண்டி, பள்ளிபாளையத்தில் ஏழு நாட்கள் தொடர் சிறப்பு யாக பூஜை நடக்கிறது. தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் பூரண நலம் பெற, நாமக்கல் மாவட்ட, அ.தி.மு.க., சார்பில், பள்ளிபாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தின் மைதானத்தில், நேற்று முதல், வரும், 12ம் தேதி வரை, ஏழு நாட்கள் தொடர் சிறப்பு யாக பூஜை நடக்கிறது. இந்த பூஜையில், சிறப்பு கணபதி யாகம், ஸ்ரீசத்ரு சம்ஹார யாகம், ஸ்ரீதன்வந்திரி யாகம் உள்பட, மொத்தம், 14 சிறப்பு பூஜைகள் நடக்கிறது. நேற்று நடந்த பூஜையில், எம்.பி.,சுந்தரம், பள்ளிபாளையம் நகர செயலாளர் வெள்ளிங்கிரி உள்பட பலர் கலந்து கொண்டர்கள்.