உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரியானூர் தசாவதார பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம்

அரியானூர் தசாவதார பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம்

அரியானூர்: அரியானூர், தசாவதார பெருமாள் கோவிலில், 35வது ஆண்டு உற்சவ விழா, புதிய கல் மண்டபம், ஆதிபராசக்தி அம்மன் சிலை பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேகம், நாளை நடைபெற உள்ளது. காலை, 7:45 மணிக்கு மேல், 8:45 மணிக்குள், புதிதாக கட்டப்பட்டுள்ள கல் மணி மண்டபத்தில், ஆதிபராசக்தி அம்மன் சிலையை பிரதிஷ்டை செய்து, கும்பாபிஷேகம் செய்யப்பட உள்ளது. இதில், மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் ஆசியுடன், ஆதிபராசக்தி சித்தர் பீட நிர்வாக அறங்காவலர் அன்பழகன், சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். அன்று, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கம், ஸ்ரீகாலங்கி கஞ்சமலையான் என்ற கரடி சித்தர் ஆசிரமம் மற்றும் காலங்கி சித்தர் அன்னதான தர்ம அறக்கட்டளை சார்பில், சேலம் மாவட்டத்தில் உள்ள, பார்வையற்றோர் பள்ளி, மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி, காது கேளாதோர் பள்ளி, மாற்றுத்திறனாளிகள் காப்பகம் மற்றும் ஆதரவற்றோர் காப்பகங்களுக்கு, அவர்கள் இருப்பிடத்திலேயே, அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், புரட்டாசி நான்காவது சனிக்கிழமை என்பதால், 77 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவிலில், காலை முதல் மாலை வரை, சிறப்பு பூஜை செய்யப்பட உள்ளது. மாலை, 7:00 மணிக்கு, திருக்கோடி ஏற்றப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !