உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவராத்திரி உற்சவம்:அம்மனுக்கு சந்தனத்தில் காப்பு

நவராத்திரி உற்சவம்:அம்மனுக்கு சந்தனத்தில் காப்பு

ஆர்.கே.பேட்டை:நவராத்திரி உற்சவம், அம்மன் கோவில்களில் விமரிசையாக நடந்து வருகிறது. நேற்று, அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் நடந்தது.ஆர்.கே.பேட்டை அடுத்த, வெள்ளாத்துாரில் அமைந்துள்ளது, வெள்ளாத்துாரம்மன் கோவில். காளஹஸ்தி ஞானபிரசுணாம்பிகை தாயார், வெள்ளாத்துாரம்மன் குலத்தில் பிறந்தவர் என்பது ஐதீகம். அதன்படி, சிவராத்திரி அன்று காளஹஸ்தியில் நடைபெறும் திருக்கல்யாணத்தில், வெள்ளாத்துார் மரபினர் சார்பில், பெண் வீட்டார் சீதனம் சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது. சிறப்பு வாய்ந்த வெள்ளாத்துாரம்மன் கோவிலில், நேற்று, நவராத்திரி வெள்ளிக்கிழமையை ஒட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. காலை, 10:00 மணிக்கு, அம்மனுக்கு அபிேஷகமும் அதை தொடர்ந்து சந்தனக்காப்பு அலங்காரத்தில் மூலவர் அம்மன், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இதே போல், அம்மையார்குப்பம் அங்காளம்மன் கோவிலிலும், நவராத்திரி சிறப்பு உற்சவம் நடந்து வருகிறது. நேற்று இரவு, சந்தனக்காப்பு அலங்காரத்தில், அம்மன் கொலு மண்டபத்தில் எழுந்தருளினார். திரளான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !