சமுதாய ஒற்றுமை பொங்கல்: மழை வேண்டி வழிபாடு!
ADDED :3329 days ago
ராமநாதபுரம்: மழை வேண்டி கிராம மக்கள் சமுதாய ஒற்றுமையுடன் பொங்கல் வழிபாடு நடத்தினர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கிய நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் வறட்சி நிலவுகிறது. மழையை எதிர்பார்த்து மானாவாரி நிலங்களில் விவசாயிகள் நெல்விதைப்பை முடித்துள்ளனர். ஆனால், மழை பெய்யவில்லை. இதனால், உத்தரகோசமங்கை அருகே ஆலங்குளம் கிராமத்தில், அனைத்து சமுதாயத்தினரும் சேர்ந்து சமுதாய ஒற்றுமை பொங்கல் வைத்தனர். ஊர் எல்லையில் உள்ள பழமையான பெரியகருங்கார் அய்யனார் கோயில் முன் 300க்கும் மேற்பட்டோர் பொங்கல் வைத்தனர். மூன்றாம் ஆண்டாக இந்த பொங்கல் வழிபாடு நடந்தது. பொங்கல் வைத்தால் மழை பெய்யும் என்பது இக்கிராமத்தினரின் நம்பிக்கை. அறங்காவலர் முருகேசன், ஊராட்சி தலைவர் குமாரவேல் தலைமையில் கிராமத்தினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.