சுந்தரவேலவர் கோயிலில் விளக்கு பூஜை
ADDED :3329 days ago
கூடலுார்: கூடலுார் கூடல் சுந்தரவேலவர் கோயிலில், நவராத்திரி விழாவை முன்னிட்டு விளக்கு பூஜை நடந்தது. கோயிலில் வைக்கப்பட்டிருந்த கொலுவிற்கு முன் மகாலட்சுமி அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார். பெண்கள் விளக்கு ஏற்றி பக்தி பாடல்கள் பாடினர். நவராத்திரி குறித்த பக்தி சொற்பொழிவு நடந்தது.