உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரூரில் நவராத்திரி 7 ம் நாள் விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு

அரூரில் நவராத்திரி 7 ம் நாள் விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு

அரூர்: அரூரில், நவராத்திரி விழாவின், ஏழாம் நாளை முன்னிட்டு, சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அரூர், கடை வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் தேவஸ்தானத்தில், நவராத்திரி விழாவின் ஏழாம் நாளை முன்னிட்டு, பூஜையறையில் மலர்க்கோலம் இடப்பட்டு, 163 கொலு பொம்மைகள் வைக்கப்பட்டன. பின்னர், அம்மனுக்கு பொங்கல், மாவிளக்கு, பாயாசம் மற்றும் பழங்கள் வைத்து சிறப்பு பூஜையும், ஆராதனையும் நடத்தப்பட்டது. நவராத்திரியை முன்னிட்டு, தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு வருகிறது. விழாவில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு மஞ்சள், குங்குமம், மற்றும் வளையல்கள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !