கரிவரதராஜ பெருமாள் கோவிலில் வரும் 12ல் அம்புசேர்வை திருவிழா
ADDED :3328 days ago
புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி அருகே உள்ள கோவில்புதூரில், 300 ஆண்டுகால பழமை வாய்ந்த கரிவரதராஜபெருமாள் கோவில் உள்ளது. கோவிலில், விஜயதசமியை முன்னிட்டு, அம்புசேர்வை திருவிழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு, வரும், 11ம் தேதி இரவு, விழா துவங்குகிறது. முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வரும், நான்கு சுவாமி வாகனங்களும், 12ம் தேதி காலை, பிளேக் மாரியம்மன் கோவிலை சென்றடைகிறது. அங்கு, குதிரைவாகனத்தில், கரிவரதராஜ பெருமாள் எழுந்தருளி, அம்புசேர்வை நடக்கிறது. காலை கவாள பூஜை, மாலை, பாவாடை பூஜை நடக்கிறது. இரவில் சுவாமி வாகனங்கள் மீண்டும், கோவிலை சென்றடைகின்றன.