பிளேக் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா
ADDED :3328 days ago
புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி பிளேக் மாரியம்மன் கோவிலில், நவராத்திரி விழா நடக்கிறது. நவராத்திரி விழா, கடந்த, 2ம் தேதி துவங்கியது. தினசரி குங்கும அலங்காரம், காமாட்சி, மகாகாளி, அன்னபூரணி, காயத்ரி, துர்காதேவி என, சுவாமிக்கு பல அலங்காரங்கள் செய்து பூஜை நடந்தது. சுவாமிக்கு இன்றும், நாளையும் சரஸ்வதி, மகாலட்சுமி அலங்காரமும், வரும், 10ம் தேதி இரவு சந்தனக் காப்பு அலங்காரமும் செய்யப்படும். மேலும், நவராத்திரியை முன்னிட்டு, கோவில் வளாகத்தில் கொலு வைக்கப்பட்டுள்ளது. வரும், 11ம் தேதி, விஜயதசமி விழாவுக்கான ஏற்பாடுகளும் நடக்கிறது.