சோழவந்தான் ஐயப்ப சேவா சங்கம் சார்பில் உழவாரப்பணி
ADDED :3326 days ago
சோழவந்தான்: சோழவந்தான் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் கோயில்களில் துாய்மை இந்தியா திட்டத்தில் உழவாரப்பணி நடந்தது.
சங்க தலைவர் காத்தமுத்து தலைமையில் 20 பெண்கள் உட்பட 50 சேவாதள உறுப்பினர்கள் சாஸ்தா ஐயப்பன் கோயில், ஜெனகநாராயணப்பெருமாள் கோயில் வளாகங்களில் அடர்ந்த முட்புதர்களை அகற்றி, சுவர்களை சுத்தம் செய்து,வெள்ளை வர்ணம் அடித்து உழவாரப்பணியில் ஈடுபட்டனர். பின்னர் மழைவேண்டி ஜெனகைமாரியம்மன் கோயில் ஐயப்பன் கோயில்களில் சிறப்பு பூஜை, தீபாராதனைகள் நடந்தது. சங்க நிர்வாகிகள் சேகர், தங்கப்பாண்டி, கண்ணன் அன்னதானம் வழங்கினர்.