அயல்நாடுகளில் சரஸ்வதி...
ADDED :3675 days ago
ஜப்பானியர்கள் பெண்டென் என்னும் பெயரில் சரஸ்வதியை வழிபடுகின்றனர். டிராகன் என்ற அசுர பாம்பு வாகனத்தில் வரும் இத்தேவி சிதார் இசைக்கிறார். இந்தோனேஷியாவிலும், பாலித் தீவிலும் புத்தகங்களை அலங்கரித்துப் பூஜிக்கும் வழக்கம் இருக்கிறது. இந்தப் பூஜைக்கு கலஞ்சன் என்று பெயர். விஜயதசமி நாளில் பாலித் தீவில் தம் பாத்ஸரிம் என்னும் குளத்தில் நீராடி புத்தகங்களை வழிபட்டால், கல்வியில் சிறந்து விளங்கலாம் என்பது அங்குள்ள மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது.