ஏழ்மை அகல!
ADDED :3671 days ago
மனதில் சாந்தியும், புத்தியில் தெளிவும் ஏற்பட, ஏழ்மை அகன்று சுபிட்சம் உண்டாக, கோயில் நதிக்கரை, கோசாலை, மகான்களின் சமாதி போன்ற புனித இடங்களில் தீபமேற்றி வழிபட வேண்டும். தீபமேற்றும்போது, கீழ்க்காணும் சுலோகத்தைச் சொல்லி தீபமேற்றுவது விசேஷம்.
அக்ணீடர் ஜ்யோதீ ரவி ஜ்யோதிஷ் சந்த்ரோ ஜ்யோதிஸ் ததைவச
உத்தம: ஸர்வஜ்யோதீநாம் தீபோயம் ப்ரதி க்ருஹ்யதாம்
இந்த சுலோகத்தைக் கூற முடியாதவர்கள், நெருப்பு, சூரியன், சந்திரன் ஆகிய மூன்று ஒளிகளில் சிறந்ததான இந்த தீபத்தின் ஒளியை தங்களுக்கு சமர்ப்பிக்கிறேன். இதை கருணையுடன் ஏற்று அருள்புரிய வேண்டும் என்று சொல்லி வணங்க வேண்டும்.