பழநியில் 11 நாட்களுக்கு பின் இன்று தங்கரத புறப்பாடு
ADDED :3326 days ago
பழநி: நவராத்திரி விழாவை முன்னிட்டு பழநி மலைக்கோயிலில் 11 நாட்களாக நிறுத்தப்பட்ட தங்க ரத புறப்பாடு இன்று முதல் மீண்டும் நடக்கிறது.
பழநி மலைக்கோயிலில் தினமும் இரவு 7 மணிக்கு மேல், தங்க ரதப் புறப்பாடு நடக்கும். கந்த சஷ்டி, பெரிய கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம், நவராத்திரி போன்ற விழா காலங்களில் மலைக்கோயிலில் தங்க ரதபுறப்பாடு நிறுத்தப்படும்.நவராத்திரி விழாவிற்காக அக்.,1 முதல் அக்.,11 வரை தங்கரத புறப்பாடு நிறுத்தப்பட்டது. நேற்று விஜயதசமியோடு நவராத்திரி விழா முடிவடைந்தது. இதையடுத்து 11 நாட்களுக்கு பின் மீண்டும் இன்று முதல் தினமும் இரவு 7மணிக்கு மலைக்கோயிலில் தங்க ரத புறப்பாடு நடக்கிறது.