உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மைசூரு தசரா விழா ஜம்பு சவாரியில்... குதூகலம்!

மைசூரு தசரா விழா ஜம்பு சவாரியில்... குதூகலம்!

மைசூரு: தங்க அம்பாரியில், சாமுண்டீஸ்வரி தேவி கொலு வீற்றிருக்க, லட்சக்கணக்கானோர் முன்னிலையில், ஜம்பு சவாரி ஊர்வலம் கோலாகலமாக நடந்தது.

மைசூரு, 406வது தசரா விழா, அக்., 1ல் துவங்கியது. சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு, கன்னட கவிஞர் சன்னவீர கனவி, மலர் துாவி துவக்கி வைத்தார். அம்பாவிலாஸ் அரண்மனையில், மன்னர் காலம் போல், தினமும் தனி தர்பார் நடத்தப்பட்டது. ராஜ குடும்பத்தை சேர்ந்த யதுவீர், தர்பார் நடத்தினார். 11வது நாளான, நேற்று தசரா விழா நிறைவடைந்தது.

வன்னி மர பூஜை: விஜயதசமி தினமான நேற்று, ராஜ குடும்பத்தை சேர்ந்த யதுவீர், அரண்மனை வளாகத்தில் உள்ள வன்னி மரத்துக்கு, இரண்டு காளைகள் பூட்டப்பட்டிருந்த, வெள்ளி பல்லக்கில் பவனி வந்து, சிறப்பு பூஜை செய்தார். அப்போது, அவரது மனைவி திரிஷிகா குமாரி, அரண்மனை ஜன்னல் வழியாக பார்த்து, பரவசம் அடைந்தார். பாரம்பரியமிக்க குஸ்தி போட்டியை நடத்தி, வெற்றி பெற்ற வீரர்களுக்கு, பணப்பரிசு வழங்கப்பட்டது.

அலங்கார ஊர்தி பயணம்: பகல், 2:16 மணிக்கு, அரண்மனையின் பலராமா வாயிலில் உள்ள நந்தி ஸ்துாபத்துக்கு, சுப மகர லக்னத்தில், முதல்வர் சித்தராமையா, யதுவீர் பூஜை நடத்தினர். பின், 2:45 மணிக்கு, ஜம்பு சவாரி ஊர்வலம் துவங்கியது. முதலில் நவுபத், நிசானி யானைகள் முன் செல்ல, கர்நாடகாவின், 30 மாவட்டங்களில் இருந்து, மாநில அரசின் சிறப்புகளை விளக்கும், 42 அலங்கார ஊர்திகள் பின் தொடர்ந்தன. ஒவ்வொரு ஊர்திக்கு முன், ஒவ்வொரு பாரம்பரிய கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

சாமுண்டீஸ்வரிக்கு வணக்கம்: சாமுண்டீஸ்வரி அம்மனை சுமந்த, அர்ஜுனா யானை தலைமையிலான கஜபடைகள், 5:08 மணிக்கு, சிறப்பு விருந்தினர் மேடையருகே வந்தன. அப்போது, 750 கிலோ தங்க அம்பாரியில் வீற்றிருந்த சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு, முதல்வர் சித்தராமையா, யதுவீர், மாவட்ட பொறுப்பு அமைச்சர் மகாதேவப்பா, கலெக்டர் ரந்தீப், மேயர் பைரப்பா, கமிஷனர் தயானந்த் ஆகியோர், மலர் துாவி வணங்கினர். அப்போது, 21 பீரங்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. ராஜ கம்பீரத்துடன் அர்ஜுனா யானை, ஆடி அசைந்து வந்தது. தங்க அம்பாரியை சுற்றிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்காக சென்றனர். வழி நெடுகிலும் ஊர்வலத்தினரை உற்சாகப்படுத்தும் வகையில், கை தட்டி பொது மக்கள் ஆரவாரம் செய்தனர்.பன்னி மண்டபத்தை, 5 கி.மீ., கடந்து மாலை 6:50க்கு அடைந்ததும், டார்ச் லைட் அணி வகுப்பை, கவர்னர் வஜுபாய்வாலா துவக்கினார். அதை காண மக்கள் குவிந்தனர்.

மழை குறுக்கீடு: மழை பெய்ததால், அலங்கார ஊர்திகள் அரண்மனை வளாகத்தை விட்டு வெளியே செல்ல, மாலை, 5:00 மணி ஆனது. துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினர், போலீசாரின் குதிரை அணிவகுப்பு முன் செல்ல, பேண்ட் வாத்திய குழுவினர் அவர்களை பின் தொடர்ந்தனர்.

மாவட்டம், துறை வாரியாக இடம் பெற்ற ஊர்திகள்:


குடகு: வேடர்களின் மலை வாழ்க்கைகொப்பால் : வீட்டிலேயே குப்பை பிரிப்பு விழிப்புணர்வுகோலார்: விஜயநகர் அரசர்களால், 14 வது நூற்றாண்டில் கட்டப்பட்ட சோமேஸ்வரா கோவில்கதக்: இசையின் மகத்துவம்சாம்ராஜ்நகர்: சமத்துவம் குறித்த விழிப்புணர்வுசிக்கபல்லாபூர்: பகாசூரனை வசம் செய்த பாண்டவர்களின் கைவாரா மலை சிக்கமகளூரு: கி.பி.1338ல் நிறுவிய ஸ்ரீவித்யாசாகர் கோவில் சித்ரதுர்கா: சூரிய மற்றும் காற்றாலை மின்சக்தி விழிப்புணர்வுதுமகூரு: தென்னை, தானியங்களின் விளைச்சல் மற்றும் சித்தகங்கா மடாதிபதி சிவகுமார சுவாமிகள் பெங்களூரு நகரம் : மத்திய நுாலகத்தின் நுாற்றாண்டு விழாயாத்கிர்: கவி சித்தலிங்கேஸ்வரா கோவில்ஹாவேரி: சுதந்திர போராட்டம் நினைவுகலபுரகி: சந்திரலாம்பா கோவில்பாகல்கோட்டை: கருங்கல்லால் செதுக்கப்பட்ட பட்டதகல்லுவின் சங்கமேஸ்வரா கோவில்உத்தர கன்னடா: மரகாம்பா கோவில் உடுப்பி: துாய ஆரோக்கிய மேரி தீவுராம்நகர் : மரப்பொம்மைகள் ஷிவமொகா: ஜோக் நீர் வீழ்ச்சிஹாசன் : 2018ல் கோமதீஸ்வரருக்கு நடக்கும் மகா மஸ்தகாபிஷேகம்மாண்டியா: சிவபுரா சத்தியாகிரக நினைவுமைசூரு: மகாராணியின் அர்ப்பணிப்பு குறித்த விழிப்புணர்வுவிஜயபுரா: அலமாட்டி அணைதட்சிண கன்னடா: போர்ச்சுகீசியர்களுக்கு எதிராக போராடிய ராணி அப்பக்கா மகாதேவிதாவணகரே: ஸ்ரீரங்கநாத சுவாமி கோவில்தார்வாட் : சியாச்சின் மலை பிரதேசத்தில் பனியில் சிக்கி, 21 நாட்களுக்கு பின் உயிர் நீத்த ஹனுமந்தப்பாபல்லாரி: ஹம்பி உக்ர நரசிம்மா கோவில் ராய்ச்சூரு: ஹட்டி தங்கச்சுரங்கம்பெலகாவி: மேற்கு மலை தொடர்ச்சியில் உள்ள பீம கடா வனவிலங்கு சரணாலயம்பெங்களூரு ஊரகம்: தேவனஹள்ளி கோட்டை, சர்வதேச விமான நிலையம்துறைகள்சுற்றுலா துறை: வன விலங்கு பாதுகாப்பு சுகாதாரம் மற்றும் குடும்பநல துறை: அனைவருக்கும் சுகாதாரம், எங்கும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வுசெய்தித்துறை: மெட்ரோ உட்பட அரசின் பல்வேறு திட்டங்கள் விளக்கம்கல்வித்துறை: அனைவரும் கற்போம், அனைவரும் உயர்வோம் மற்றும் புதிய தொழில் நுட்ப கல்வி மைசூரு தசரா துணை சமிதி: சட்ட மேதை அம்பேத்காரின் 125 வது பிறந்த நாள் நினைவுசிறுபான்மை நல துறை: சிறுபான்மையினருக்கான திட்டங்கள் தொல்லியியல் துறை: ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ நாகரிக நினைவுஸ்டேட் பாங்கு ஆப் மைசூரு: நால்வடி கிருஷ்ண ராஜ உடையாரின் நினைவுகாவிரி நதி நீர் வாரியம்: மழை நீர் சேகரிப்பு திட்டம் பாரத் பெட்ரோலியம்: இயற்கை வளங்கள் பாதுகாப்பு தொல்லியியல் துறை: பழங்கால நினைவு சின்னம் பாதுகாப்புமைசூரு தசரா விழா குழுவினர்: அரண்மனை வாத்தியம்நாட்டுப்புற கலைகள்: வன வேடர்கள் ஆட்டம், பொம்மலாட்டம், கத்தி வரசே, தமிழக பொய்கால் குதிரையாட்டம், புலியாட்டம், தாரை, தப்பட்டை, வீரகாசே, டொல்லு குனிதா, பூஜா குனிதா, கம்சாலே, நாதஸ்வரம், கோலாட்டம், கேரளா கதகளியாட்டம், மரக்கால் ஆட்டம், குறவர் ஆட்டம், சோமன குனிதா, மயிலாட்டம், கேரளா சண்டி மேளம் உட்பட, 50க்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !