தசரா உற்சவ தேர் ஊர்வலம் மசினகுடியில் கோலாகலம்
ADDED :3284 days ago
கூடலுார்: மசினகுடி, மசினியம்மன் கோவில் தரச உற்சவ தேர் திருவிழா சிறப்பாக நடந்தது.
மசினகுடி, மசினியம்மன் கோவில், தசரா உற்சவ திருவிழா கடந்த, 30ல், 7:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது.
தொடர்ந்து, மாயாரிலிருந்து சிக்கம்மன் கோவிலுக்கு, அம்மன் அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, கொலு வைத்தல் நிகழ்ச்சிகள் நடந்தன. ஒன்றாம் தேதி முதல், 8ம் தேதி வரை நாள்தோறும், பூஜைகளும், ஆராதனைகளும் நடந்தன. நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு மசினியம்மன் கோவிலில் துவங்கிய ஊர்வலம், முக்கிய சாலை வழியாக சென்று, மீண்டும் கோவிலை வந்தடைந்தது. மாவிளக்கு பூஜைகளும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து, சிக்கம்மன் வழி அனுப்பும் நிகழ்ச்சி நடந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.