ஸ்ரீவி.,வடபத்ரசயனர் கோயில் செப்புத்தேரோட்டம்
ADDED :3284 days ago
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் வடபத்ரசயனர் கோவிலில் புரட்டாசி பிரம்மோற்சவத்தினை முன்னிட்டு நேற்று செப்புத்தேரோட்டம் நடந்தது. கடந்த அக்.3ந்தேதி முதல் புரட்டாசி பிரம்மோற்சவத்திருவிழா நடந்து வருகிறது. 5ம் நாளன்று கருடசேவை, 7ம் நாளன்று சயனசேவையும் நடந்தது. 9ம் நாளான நேற்று காலை 7 மணிக்கு திருத்தேரில் பெரியபெருமாள், ஸ்ரீதேவி, பூமிதேவி எழுந்தருளினர். ரகு பட்டர் சிறப்பு பூஜை செய்தார். பின் பக்தர்கள் தேரினை வடம்பிடித்து இழுத்தனர். நிகழ்ச்சியில் மணவாளமாமுனிகள் மடத்தின் ஜீயர் சுவாமிகள், செயல்அலுவலர் ராமராஜா மற்றும் அறநிலையத்துறை அலுவலர்கள், பக்தர்கள் கலந்துகொண்டனர்.