களைகட்டியது திருமூர்த்திமலை
ADDED :3284 days ago
உடுமலை: உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது ருமூர்த்திமலை. ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட இங்கு அமணலிங்கேஸ்வரர் கோவில், பஞ்சலிங்கம் அருவி, திருமூர்த்தி அணை, நீச்சல் குளம், மீன் காட்சியகம் போன்றவை உள்ளன.
கோவை, திருப்பூர் உட்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுற்றுலா பயணிகள் அதிக அளவில் இங்கு வருகின்றனர். சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையையொட்டி தொடர் விடுமுறை நாட்கள் வந்ததால், இங்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அங்கு வந்த சுற்றுலா பயணிகள் திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் சாமிதரிசனம் செய்தனர். பின்னர் பஞ்சலிங்கம் அருவிக்கு சென்றனர். அருவியில் தண்ணீர் வராததால் ஏமாற்றமடைந்தனர். அமராவதி அணையிலும் மக்கள் அதிக அளவில் வந்திருந்தனர். அங்கு முதலைப்பண்ணை, அணையை சுற்றிப்பார்த்து ரசித்தனர்.