கரிவரதராஜ பெருமாள் கோவிலில் கழிப்பிடம் கட்டும் பணி துவக்கம்
ADDED :3341 days ago
புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி, கோவில்புதூரில் அறநிலையத்துறைக்கு சொந்தமான கரிவரதராஜ பெருமாள் கோவிலில், கழிப்பிட வசதி இல்லை. இதனால் பெண் பக்தர்கள் சிரமப்பட்டனர். அதே சமயம், ஆண்கள் மற்றும் குழந்தைகள் வளாகத்தின் பின்புறத்தை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தினர். இதனால் எழுந்த துர்நாற்றம் மொத்த பக்தர்களையும் முகம் சுளிக்க வைத்தது. கழிப்பிடம் கட்ட கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் கோவில் நிர்வாகம் சார்பில், வளாகத்தின் வடக்கு பகுதியில், ஆண், பெண்களுக்கு தனித்தனியாக கழிப்பிடம் கட்டப்படுகிறது. விரைவில் பயன்பாட்டிற்கு வரும், என நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.