உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எட்டா? எட்டரையா? சென்னிமலை மலைகோவிலில் தட்டியால் ஏழரை

எட்டா? எட்டரையா? சென்னிமலை மலைகோவிலில் தட்டியால் ஏழரை

சென்னிமலை: சென்னிமலை மலைக்கோவில், நிர்வாகத்தின் குளறுபடி போர்டால், பக்தர்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோவில் பணியாளர்களிடம் தகராறும் செய்கின்றனர்.

சென்னிமலை மலை மீதுள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு, செவ்வாய்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். கோவில் நடை திறப்பு, நடை சாத்துதல் குறித்து, திருக்கோவில் நிர்வாகம் சார்பாக, மலை அடிவாரத்தில் போர்டு வைக்கப்பட்டுள்ளது. அதில், மலை கோவிலுக்கு தார்ச்சாலை வழியாக, வாகனங்கள் செல்ல, இரவு, 8:30 மணி வரை அனுமதிக்கப்படும் என ஒன்றிலும், மற்றொரு அறிவிப்பில், மலைப்பாதையில், 8:00 மணிக்கு மேல் வாகனங்கள் செல்ல அனுமதியில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர். இதனால் பக்தர்கள் குழப்பம் அடைகின்றனர். டோல்கேட் ஊழியர்களிடம் வாக்குவாதம், தகராறு செய்கின்றனர். மலை மேல் செல்ல அனுமதி மறுத்தால், கும்பலாக வரும் பக்தர்கள், இரவு காவலர்களை தாக்க முயல்கின்றனர். பக்தர்களும் நடைமுறையை கடைபிடிக்க வேண்டும். குறிப்பாக சில வி.ஐ.பி., பக்தர்கள், இரவு, 8:30 மணிக்கு மேல் வந்து தொந்தரவு செய்கின்றனர். இவர்களைப் பார்த்து மற்ற பக்தர்களும், தங்களையும் அனுமதிக்க வேண்டுகின்றனர். இறைவன் முன் அனைவரும் சமம் தானே? இதில் வி.ஐ.பி., அந்தஸ்து எதற்கு? கோவில் நிர்வாகம் உறுதியான முடிவெடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !