அம்பு எய்தல் நிகழ்ச்சி
ADDED :3281 days ago
இளையான்குடி: இளையான்குடி வாள்மேல் நடந்த அம்மன் கோயிலில் நவராத்திரி விழாவில் அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி அம்பு எய்தார்.
இக்கோவிலில் நவராத்திரி விழா அக்.1ல் துவங்கி நடந்து வருகிறது. தினமும் அம்மன் சிறப்பு அலங்காரங்களில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தினமும் இரவு 8மணிக்கு சிறப்பு சொற்பொழிவு நடந்தது. முக்கிய விழாவான அம்பு எய்தல் நிகழ்ச்சி, நேற்று இரவு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்,சிறப்பு பூஜைகள் நடந்தது. இன்று காலை 9மணிக்கு பால்குடம்,இரவு 10 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா நடக்கிறது.