உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூக்குழித்திருவிழா

பூக்குழித்திருவிழா

தளவாய்புரம்: சொக்கநாதன்புத்துார்  மேலுார்துரைச்சாமியாபுரத்தில் முப்பிடாதியம்மன் கோயில் புரட்டாசி பூக்குழித்திருவிழா கடந்த மாதம் 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.தினமும் அம்மன் பல்வேறு வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. 7ம் திருநாளன்று காப்பு கட்டும் நிகழ்ச்சி, இரவில் அம்மன் பூ பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.விழா முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 7 ம்தேதி இரவில் பக்தர்கள் பூக்குழி இறங்கினர். தொடர்ந்து மஞ்சள் நீராட்டுடன் விழா முடிந்தது. விழா ஏற்பாட்டை விழா கமிட்டியனர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !