உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மொகரம் பண்டிகையை முன்னிட்டு கத்தி போடும் நிகழ்ச்சி!

மொகரம் பண்டிகையை முன்னிட்டு கத்தி போடும் நிகழ்ச்சி!

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவில் மொகரம் பண்டிகையை முன்னிட்டு, ஷியா பிரிவு முஸ்லிம்கள் உடலில் கத்தி போட்டு, இந்நாளை அனுஷ்டித்தனர். ஆண்டுதோறும் மொகரம் பண்டிகையன்று ஷியா பிரிவு முஸ்லிம்கள் உடலை வருத்தி, துக்கப் பாடல் பாடி இந்நாளை அனுஷ்டிக்கின்றனர். அதன்படி நேற்று, இந்நாளை முன்னிட்டு, கிணத்துக்கடவு அருகேயுள்ள சொலவம்பாளையம், லட்சுமி நகர் பகுதி ஷியா பிரிவு முஸ்லீம்கள் ஆண், பெண், குழந்தைகள் அனைவரும் கருப்பு உடை அணிந்து உடலில் கத்தி போட்டு ரத்தம் சொட்ட சொட்ட இந்நாளை அனுஷ்டித்தனர். நேற்று தொழுகை நடத்தி, அவ்விடத்தில், பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ஆண், பெண், குழந்தைகள் அனைவரும் தங்களது உடலில் இரண்டு மணி நேரம் கத்தி போட்டனர். ஷியா முஸ்லிம் மக்கள் தரப்பில் கூறுகையில், எங்களது பிரிவை சேர்ந்தவர்கள் சென்னை, வேலுார், திருப்பரங்குன்றம், காரைக்குடி, திருச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்துார், கோவை போன்ற பல்வேறு இடங்களில் வசிக்கின்றனர். இந்நாளை அனைவரும் துக்க நாளாக அனுசரித்து அனைத்து இடங்களிலும், இதுபோன்று உடலில் கத்தி போட்டு தொழுகை நடத்துவர். இப்பகுதியில் எங்களுக்கு சொந்த இடம் உள்ளதால், ஆண்டுதோறும் மொகரம் முதல் தேதியன்று வந்து, டென்ட் அடித்து தங்கி, 10 வது நாளில் உடலில் கத்தி போட்டு தொழுகை நடத்தி வருகிறோம். என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !