உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னையில் விரைவில் திருப்பதி தேவஸ்தான தமிழ் டிவி!

சென்னையில் விரைவில் திருப்பதி தேவஸ்தான தமிழ் டிவி!

திருப்பதி: சென்னையில் உள்ள, திருப்பதி தேவஸ்தான கோவில் வளாகத்தில், இம்மாத இறுதிக்குள், தமிழ், டிவி துவங்கப்படும், என, தேவஸ்தான செயல் அதிகாரி சாம்பசிவ ராவ் தெரிவித்தார். இதுகுறித்து, அவர் கூறியதாவது: திருமலையில், ஒன்பது நாட்களாக நடந்து வந்த, ஆண்டு பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது. சிறப்பாக செயல்பட்ட ஊழியர்களுக்கு, வெகுமதி அளிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இருந்து, பிரம்மோற்சவத்தை காண, அதிக பக்தர்கள் வருகின்றனர். அதனால், சென்னை, தி.நகரில் உள்ள, திருமலை திருப்பதி தேவஸ்தான கோவில் வளாகத்தில், இம்மாத இறுதிக்குள் தமிழ், டிவி துவங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

29 லட்சம் லட்டு விற்பனை : கடந்த ஆண்டு பிரம்மோற்சவத்திற்கு, 5.19 லட்சம் பேர் வந்தனர்; உண்டியல் மூலம், 15.06 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. இந்த ஆண்டில், 6.97 லட்சம் பக்தர்கள் வந்துள்ளனர்; உண்டியல் மூலம், 29.96 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. முந்தைய பிரம்மோற்சவத்தில், 22.65 லட்சமாக இருந்த லட்டு விற்பனை, இம்முறை, 29.96 லட்சமாக உயர்ந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !