ராமநாதபுரம் கோயிலில் முளைப்பாரி விழா
ADDED :3326 days ago
ராமநாதபுரம்: மண்டபம் முகாம் சித்தி விநாயகர் மாரியம்மன், சின்ன ஓடைத்தோப்பு பூமாரி அம்மன், எம்.ஜி.ஆர்., நகர் உச்சினி மாகாளியம்மன் கோயில் முளைப்பாரி விழா அக்., 4ல் காப்பு கட்டு, முத்து பரப்புதலுடன் துவங்கியது. இதை முன்னிட்டு தினமும் இரவு இளைஞர்களின் ஒயிலாட்டம் நடந்தது. அக்., 11 இரவு அம்மன் கரகம் கோயிலை வந்தடைந்தது. அதிகாலையில் காவல் தெய்வத்தின் அருள்வாக்கு கேட்கப்பட்டது. நேற்று காலை அம்மன் கரகம் பக்தர்களின் தரிசனத்திற்கு வீதியுலா சென்றது. பெண்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கிட்டும், முடி இறக்கியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலையில் அம்மன் கரகம் முளைப்பாரி சுமந்த பெண்களுடன் ஊர்வலமாக சென்று கடற்கரையில் கரைக்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், விழாக்குழு நிர்வாகிகள் செய்தனர். இக்கோயில்களில் அக்., 18ல் குளுமை பொங்கல் நடக்கிறது.