உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முதல்வர் ஜெ., நலம் பெற வேண்டி பால் குடம் ஊர்வலம்

முதல்வர் ஜெ., நலம் பெற வேண்டி பால் குடம் ஊர்வலம்

கரூர்: கரூர் மாவட்ட, அ.தி.மு.க., சார்பில், முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் பெற வேண்டி, பால் குடம் ஊர்வலம் நேற்று நடந்தது. தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் தேறி மீண்டும் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று வேண்டிக் கொண்டு, அ.தி.மு.க.,வினர் பால்குடம் ஏந்தி கரூர் மாரியம்மன் கோவிலுக்கு நேற்று காலை ஊர்வலமாக வந்தனர். போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் 6,000க்கும் மேற்பட்டோர் ஐந்து ரோட்டில் இருந்து பால்குடம் ஏந்தி, கும்ப மரியாதையுடன் மாரியம்மன் கோவில் நோக்கி வந்தனர். கோவில் முன் வைக்கப்பட்டிருந்த பெரிய பாத்திரத்தில், பால் ஊற்றினர். அதன்பின், மாரியம்மனுக்கு குடம், குடமாக ஊற்றி அபி?ஷகம் செய்தனர்.

* சின்னதாரபுரம் முருகன் கோவிலில், க.பரமத்தி ஒன்றியம் அ.தி.மு.க., சார்பில், முதல்வர் ஜெயலலிதா நலம்பெற சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில், மாவட்ட பஞ்., தலைவர் (பொ) மார்க்கண்டேயன் முன்னிலை வகித்தார். பல்வேறு திரவியங்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. நிகழ்ச்சியில், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்டச் செயலர் செந்தில்நாதன், தெற்கு ஒன்றியச் செயலர் பொன்சரவணன், மாவட்ட அவைத்தலைவர் காளியப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !