உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாயிபாபா கோவிலில் பாபா ஆராதனை தினம்

சாயிபாபா கோவிலில் பாபா ஆராதனை தினம்

செஞ்சி : செஞ்சியை அடுத்த காரியமங்கலம் கருணா சாயிபாபா கோவிலில் பாபா ஆராதனை தினம் நடந்தது. இதை முன்னிட்டு காலையில் 1008 லிட்டர் பால் கொண்டு பாபாவிற்கு பக்தர்கள் நேரடியாக சிறப்பு அபிஷேகம் செய்தனர். காலை 9.30 மணிக்கு கோபூஜை நடந்தது. தொடர்ந்து கணபதி, லட்சுமி, தன்வந்தரி, சுதர்சன, குபேர ஹோமம் மகா மிருத்யுஞ்ய யாகம் நடந்தது. பகல் 12:00 மணிக்கு பாபா அஷ்டோத்ர நாமாவலியும், மதியம் 1:00 மணிக்கு கலசாபிஷேகமும், மகா தீபாராதனையும் நடந்தது. மாலை புஷ்பாஞ்சலியும், பல்லக்கு உற்சவமும் நடந்தது. பூஜைகளை பாலகணேஷ் அய்யர் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !