பவுஞ்சிப்பட்டு பெருமாள் கோவிலில் அ.தி.மு.க.,வினர் சிறப்பு வழிபாடு
மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அடுத்த பவுஞ்சிப்பட்டு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலில், முதல்வர் ஜெ., நலம்பெற வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது. அ.தி.மு.க., சார்பில், பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. நிகழ்ச்சிக்கு, ஊராட்சி மன்றத் தலைவர் பச்சமுத்து தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஜெயந்திசங்கர், ஊராட்சி செயலர்கள் கரிபன், சுப்ரமணியன், கிளை செயலாளர் முகமது அலி, ராஜதுரை, அய்யாவு முன்னிலை வகித்தனர். கிளை தலைவர் பச்சமுத்து, பொருளாளர் சையத்பீர், மேலவை பிரதிநிதிகள் ஆசீம்சர்தார், தண்டபாணி, ராஜா, மணிகண்டன், ராஜீவ்காந்தி, துக்கையன், ஷாஜகான், அக்பர்அலி, ரஷீத்கான், சையத்மீர், செல்வராஜ், பெருமாள், பாலகிருஷ்ணன், சேட்டு, முனியன், செல்வராஜ், செல்லமுத்து, தங்கராசு, தங்கவேல், முனியம்மாள், சின்னசாமி, காசிவேல், அஞ்சலை, காமராஜ், கண்ணம்மாள், வசந்தா, சிவலிங்கம், மகபூ, குப்புசாமி, கணேசன், விருத்தம்மாள், பாலன், ரகமத்துல்லா, பச்சமுத்து உட்பட பலர் பங்கேற்றனர்.