உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாதன்காடுவெட்டியில் சிறப்பு வழிபாடு

நாதன்காடுவெட்டியில் சிறப்பு வழிபாடு

திருக்கோவிலுார்: முகையூர் ஒன்றிய அ.தி.மு.க.‚ சார்பில், முதல்வர் ஜெ.‚ நலம் பெற வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது. முகையூர் அடுத்த நாதன்காடுவெட்டி சக்திமாரியம்மன் கோவிலில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஒன்றிய செயலாளர் கோதண்டராமன்‚ மாவட்ட கவுன்சிலர் இளங்கோவன்‚ உமாசங்கர் முன்னிலை வகித்தனர். சக்தி மாரி அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம்‚ அலங்காரம்‚ மகா தீபாராதனை நடந்தது. ஒன்றிய அவைத்தலைவர் பழனிவேல்‚ சுபாஷ்‚ மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் தமிழரசன்‚ மேலவை பிரதிநிதி முருகேசன்‚ கிளை செயலாளர் சீனுவாசன்‚ ஊராட்சி செயலாளர் ஆறுமுகம் உட்பட பலர் கலந்துக் கொண்டனர். பூஜை ஏற்பாடுகளை கிளை செயலாளர் ராஜேந்திரன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !