அனுப்பானடி சன்மார்க்க சத்திய சேவா நிலையத்தில் வள்ளலார் அவதார விழா
ADDED :3325 days ago
மதுரை, மதுரை அனுப்பானடி சன்மார்க்க சத்திய சேவா நிலையத்தில், வள்ளலார் அவதார விழா நடந்தது. சன்மார்க்க கொடியை மும்பை மருந்து கம்பெனி மேலாளர் சிவசங்கர் ஏற்றினார். சக்கரபாண்டியன், கார்த்திகேயன் கொடி வணக்கம் பாடினர். முதல்வர் ஜெ., பூரண நலம் பெற பிரார்த்தனை நடந்தது. கவுன்சிலர் காதரம்மாள், சாமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஹார்விபட்டி நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற மின்பொறியாளர் ராஜராமன், வேலுராஜா, ராமநாதன், வேங்கடராமன், பாண்டியன் பங்கேற்றனர்.