உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செல்வ விநாயகர் கோவிலில் நவராத்திரி அன்னதான விழா

செல்வ விநாயகர் கோவிலில் நவராத்திரி அன்னதான விழா

அன்னுார்: அன்னுார் அருகே உள்ள சொக்கம் பாளையம், செல்வ விநாயகர் கோவில், 49ம் ஆண்டு நவராத்திரி அன்னதான விழா, அக்.,1ல் கொலு பூஜையுடன் துவங்கியது. நேற்று மதியம் மதியம் அலங்கார பூஜை நடந்தது. ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பளஞ்சிக கல்வி அறக்கட்டளை சார்பில், 10, பிளஸ் ௨ வகுப்பு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர். மாலையில், சிறுவர் சிறுமியருக்கு விளையாட்டு போட்டி நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. கிருஷ்ண லீலா பஜனை குழுவுடன் சுவாமி திருவீதியுலா இரவு 8:30 மணிக்கு துவங்கி, நள்ளிரவில் முடிந்தது. தேசிய வித்யா சாலை செயலாளர் திருவேங்கிடம், விழா செயலாளர் முருகன் உள்பட திரளானவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !