ஜெ., பூரண நலம் பெற வேண்டி அ.தி.மு.க.,வினர் சிறப்பு பூஜை
ADDED :3325 days ago
புதுச்சேரி: தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண உடல் நலம் பெற வேண்டி, முத்தியால்பேட்டை சீனிவாச பெருமாள் கோவிலில், அ.தி.மு.க., வினர் சிறப்பு பூஜை நடத்தினர். முத்தியால்பேட்டை தொகுதி அ.தி.மு.க., சார்பில், வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ., தலைமையில் நடந்த பூஜையில், மாநில செயலாளர் புருஷோத்தமன், சட்டசபை கட்சித் தலைவர் அன்பழகன், பாஸ்கர் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., ஓம்சக்தி சேகர், ராஜாராமன், இணை செயலாளர் திருநாவுக்கரசு, நகர செயலாளர் ரவீந்திரன், அன்பானந்தம், துணை செயலாளர் பாண்டுரங்கன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை தொகுதி செயலாளர் செந்தில்குமார் செய்திருந்தார்.