உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலக நன்மை வேண்டி சிறப்பு ஹோமம்

உலக நன்மை வேண்டி சிறப்பு ஹோமம்

விழுப்புரம் : திருவெண்ணெய்நல்லுார் வைகுண்டவாச பெருமாள் கோவிலில் உலக நன்மை வேண்டி, மகாசாந்தி ஹோமம் நடந்தது. நிகழ்ச்சியையொட்டி, நேற்று அதிகாலை ௫:௦௦ மணிக்கு சிறப்பு திருமஞ்சனமும், காலை ௭:௦௦ மணி முதல் இரவு ௭:௦௦ மணி வரை லட்சார்ச்சனையும் நடந்தது. பகல் ௧௨:௦௦ மணிக்கு மகா சாந்தி ஹோமம் நடந்தது. இதில், கலந்து கொண்டவர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அகோபில மட நிர்வாகிகள் மற்றும் பட்டாச்சாரியார்கள் பாஸ்கர், சவும்யநாராயணன் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !