முதல்வர் நலம் பெற வேண்டி ஆதிதிருவரங்கத்தில் ஹோமம்
ADDED :3325 days ago
கள்ளக்குறிச்சி : முதல்வர் ஜெ., உடல்நலம் பெற வேண்டி, ஆதிதிருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் சிறப்பு ஆயுள் ஹோமம் நடந்தது. விழுப்புரம் தெற்கு மாவட்ட அ.தி.மு.க., தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க பணியாளர்களின் அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில், சிறப்பு ஆயுள் ஹோமம் மற்றும் பூஜை நடந்தது. நிகழ்ச்சிக்கு தொழிற்சங்க பேரவை செயலாளர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். தலைவர் கிருஷ்ணதேவன் முன்னிலை வகித்தார். இதில், அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் குமரகுரு, எம்.எல்.ஏ., பிரபு ஆகியோர் வழிபாடு செய்தனர். மாவட்ட துணைத்தலைவர் தன்ராஜ், சி.எம்.எஸ்., மாவட்ட தலைவர் சக்திவேல், செல்லகண்ணு, கோபி, பிச்சன், பாண்டியன், கணேசன், சுப்ரமணியன் மற்றும் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.