விக்கிரமங்கலம் மாரியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் திருவிழா
ADDED :3322 days ago
விக்கிரமங்கலம், விக்கிரமங்கலம் மாரியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் திருவிழாவில் பக்தர்கள் அக்னிச்சட்டி எடுத்து அம்மனுக்கு நேர்த்திகடன் செலுத்தி தரிசித்தனர்.அக்.,10 முதல் கொடியேற்றத்துடன் புரட்டாசி பொங்கல் விழா நடந்தது. நேற்று முன்தினம் பெண்கள் நெய்விளக்கேற்றி ஊர்வலமாக கோயில் வந்து பொங்கல் படைத்து தரிசித்தனர். நேற்று அய்யனார்சுவாமி கோயிலில் மஞ்சள் நீராடி அக்னிச்சட்டி எடுத்து ஊர்வலமாக விநாயகர் கோயில், காளியம்மன் கோயில்களில் பூஜை செய்து, பின்னர் மாரியம்மன் கோயில் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏற்பாடுகளை எட்டூர் கமிட்டி விழா குழு
செய்திருந்தது.