திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் பிரதோஷ விழா
ADDED :3483 days ago
திருவாடானை, திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் பிரதோஷ விழா நடந்தது. நந்தி பகவான் வெள்ளி கவசத்தால் அலங்கரிக்கபட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆதிரெத்தினேஸ்வரர், சிநேகவல்லிதாயாருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. சுவாமி, அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.