நின்ற நாராயணப் பெருமாள் கோயிலில் நாளை திருக்கல்யாணம்
ADDED :3322 days ago
திருப்புத்துார்: நின்ற நாராயணப் பெருமாள் கோயிலில் கடைசி புரட்டாசி சனியை முன்னிட்டு நாளை திருக்கல்யாணம் நடக்கிறது. காலை 7:00 மணிக்கு கோ பூஜையுடன் விழா துவங்குகிறது. தொடர்ந்து மூலவருக்கு அபிஷேகம், தீபாராதனை நடக்கின்றன. மாலை 4:30 மணிக்கு சீர் வரிசை எடுத்து வரும் நிகழ்ச்சியும், சங்கல்பம், மாலை மாற்றுதல், ஊஞ்சல், கன்னிகா தானம் நடக்கும். இரவு 7:15 மணிக்கு பெருமாளுக்கும், ஸ்ரீதேவி, பூதேவிக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது.