உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாலமலை ரங்கநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு

பாலமலை ரங்கநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை ரங்கநாதர் கோவிலில், புரட்டாசி மாதம் அனைத்து சனிக்கிழமைகளிலும் சிறப்பு வாகன உற்சவம் நடக்கும். கடந்த நான்கு வாரங்களும், அன்னவாகன உற்சவம், அனுமந்த வாகன உற்சவம், சேஷ வாகன உற்சவம், கருட வாகன உற்சவங்கள் நடந்தன. இன்று, புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி, யானை வாகனத்தில் பூதேவி, ஸ்ரீதேவியுடன் பெருமாள், எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவையொட்டி, காலை, 7:00 மணி, மதியம், 11:00 மணி, இரவு, 7:00 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இதே போல, திருமலைநாயக்கன்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் கரிவரதராஜ பெருமாள் கோவில்கள், நரசிம்மநாயக்கன்பாளையம் லட்சுமி நரசிம்ம பெருமாள், இடிகரை பள்ளி கொண்ட ரங்கநாதர் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !