முதல்வர் நலம் பெற வேண்டி தர்மபுரி மாவட்ட கோவில்களில் சிறப்பு யாகம்
ADDED :3393 days ago
தர்மபுரி: முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டி, தர்மபுரி மாவட்டத்தில், 650 கோவில்களில் சிறப்பு யாகம், பூஜை நடந்தது. முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டி, அதி.மு.க, சார்பாக பல்வேறு கோவில்களில் அமைச்சர்கள், எம்.எல்ஏ.,க்கள், நிர்வாகிகள் தொண்டர்கள் சிறப்பு பூஜை மற்றும் யாகம் நடத்தி வருகின்றனர். நேற்று தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் அ.தி.மு.க.,வினர் சிறப்பு பூஜை, யாகம், அன்னதானம் நடத்தினர். தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க., சார்பாக, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள, 650 கோவில்களில், நேற்று காலை சிறப்பு பூஜை மற்றும் யாகம் நடத்தினர். காரிமங்கலம் அடுத்த கெரகோடஹள்ளியில் அமைச்சர் அன்பழகன் தலைமையில், சிறப்பு யாகபூஜை மற்றும் அன்னதானம் நடந்தது.