ஜெ., நலமடைய வேண்டி கோலியனூர் சேர்மன் பூஜை
ADDED :3320 days ago
விழுப்புரம்: தமிழக முதல்வர் ஜெ., பூரண நலமடைய வேண்டி, அ.தி.மு.க.,வினர் விளக்கு பூஜை நடத்தி பிரார்த்தனை செய்தனர். விழுப்புரம் அடுத்த சகாதேவன்பேட்டை திரவுபதியம்மன் கோவிலில் நடந்த நிகழ்ச்சிக்கு, கோலியனுார் அ.தி.மு.க., ஒன்றிய சேர்மன் விஜயாசுரேஷ்பாபு தலைமை தாங்கினார். முன்னாள் ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபு முன்னிலை வகித்தார். இதில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி பூஜை செய்து, பிரார்த்தனை செய்தனர். அப்போது, நிர்வாகிகள் திருநாவுக்கரசு, சண்முகம், விநாயகம், லட்சுமணன், ஆறுமுகம், மணி, தயாளன், சங்கர், மணிவண்ணன், குணா, ஜெயபாலன், ராஜேந்திரன், சரவணன், சுந்தரமூர்த்தி, சுதாகர், சந்தோஷ், அமிர்தலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.