உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாசிபட்டினம் தர்காவில் சந்தன கூடு திருவிழா

பாசிபட்டினம் தர்காவில் சந்தன கூடு திருவிழா

திருவாடானை: பாசிபட்டினம் சர்தார் நைனாமுகமது ஒலியுல்லா தர்கா சந்தனக்கூடு விழா நடந்தது. தொண்டி அருகே பாசிபட்டினத்தில் சர்தார் நைனாமுகமது ஒலியுல்லா தர்கா 305ம் ஆண்டு மத நல்லிணக்க விழா அக்.,6ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. 15ம் தேதி பகலில் ஹத்தம்தமாம் நடந்தது. இரவு மவுலீது ஒதி நெய் சாதம் வழங்கப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் நேற்று முன்தினம் இரவு மாணவநகரி ஸ்தானிகன்வயல் கிராமத்திலிருந்து புறப்பட்டது. எஸ்.பி.பட்டினம், மருங்கூர், வட்டாணம் கிராமங்கள் வழியாக சென்று நேற்று அதிகாலை 4 மணிக்கு பாசிபட்டினம் தர்காவை 3 முறை வலம் வந்து தர்கா முன்பு நிறுத்தபட்டது. மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டனர். நவ.1ல் கொடியிறக்கம் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !