மணிமுத்தாறில் ஐப்பசி தீர்த்தவாரி
ADDED :3320 days ago
தேவகோட்டை: தேவகோட்டையில் ஐப்பசி முதல் தேதியும், கடைசி தேதியும் தேவகோட்டை பகுதியில் உள்ள சுவாமிகள் மணிமுத்தாறில் தீர்த்தவாரி செய்வது வழக்கம். நேற்று ஐப்பசி முதல் தேதியை முன்னிட்டு சிலம்பணி சிதம்பர விநாயகர், மீனாட்சி சுந்தரேஸ்வரர், நித்திய கல்யாணி கைலாசநாதர், ரங்கநாத பெருமாள், கோதண்டராமர், கிருஷ்ணர், மற்றும் நயினார்வயல் அகத்தீஸ்வரர் கோயில்களிலிருந்து முக்கிய வீதிகளின் வழியே உற்சவமூர்த்திகள் நேற்று மதியம் மணிமுத்தாறில் எழுந்தருளினர். விநாயகருக்காக அங்குசத்தேவர், சிவனுக்கு அஸ்திரத்தேவர், பெருமாள், கிருஷ்ணருக்காக சக்கரத்தாழ்வார்கள் மணிமுத்தாறில் தீர்த்தவாரி செய்தனர். சந்தனம், பால், உட்பட சிறப்பு அபிஷேகம் செய்விக்கப் பெற்று தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.