உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முதல்வர் நலம் பெற வேண்டி வழுதரெட்டியில் சிறப்பு பூஜை!

முதல்வர் நலம் பெற வேண்டி வழுதரெட்டியில் சிறப்பு பூஜை!

விழுப்புரம்: முதல்வர் ஜெ., நலம் பெற வேண்டி, வழுத ரெட்டி அ.தி.மு.க., சார் பில் சிறப்பு பூஜைகள் நடந்தது. விழுப்புரம் நகராட்சி, 1வது  வார்டு அ.தி.மு.க., சார்பில், வழுதரெட்டி அங்காளம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற் றும் ஆராதனை நடந்தது. ஆதிலட்சுமி  நாராயணன் தலைமை தாங்கினார்.  வார்டு செயலாளர் நாராயணன், அவைத் தலைவர் காசிநாதன், பிரதிநிதிகள் தயாளன், கலியமூர்த்தி,  ஜெரால்டு, ஏழுமலை, சண்முகம், பொருளாளர் அய்யனார், ராயர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நுாற்றுக்கும் மேற்பட்ட  பெண்கள் குத்துவிளக்கேற்றி, சிறப்பு பூஜைகள் செய்தனர். நிர்வாகிகள் சீனுவாசன், கணேசன், சாந்தகுமார், நாராயணமூர்த்தி,  அரிகிருஷ்ணன், பழனி, பாண்டி யராஜன், மோகன், பார்த்தசாரதி, அருள், அசோக்குமார், குபேர், மகேஷ், பாளையம் பகுதியைச் சேர்ந்த  கலியமூர்த்தி, ஏழுமலை, முரளி, முருகன், பிரகாஷ், சிவக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !