விநாயகர் கோவில்களில் சங்கட நிவாரண ஹோமம்
திருவள்ளூர்: சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் கோவில்களில், நாளை, சங்கட நிவாரண ஹோமம் நடக்கிறது.மாதம்தோறும் சங்ஹடகர சதுர்த்தி தினத்தன்று விநாயகருக்கு சிறப்பு ஹோமம், மகா அபிஷேகம் நடைபெறும். திருவள்ளூர், ஜெயாநகர் விஸ்தரிப்பில் உள்ள வல்லப கணபதி கோவிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, மாலை 5:00 மணிக்கு கணபதி ஹோமம் நடைபெறும். அன்றிரவு 7:00 மணிக்கு, பிரார்த்தனை தேங்காய் கட்டுதல் நிகழ்ச்சியும், இரவு 7:30 மணிக்கு மகா தீபாராதனையும் நடைபெறும். சோழவரம், பஞ்சேஷ்டியை அடுத்த, நத்தம் கிராமத்தில் (இகணபாக்கம்) ஆனந்தவல்லி சமேத வாலீஸ்வரர் கோவிலில், காரிய சித்தி கணபதி சன்னிதியில், நாளை, காலை 10:00 மணி முதல், மதியம் 2:00 மணி வரை, காரிய சித்தி கணபதிக்கு ககார ஸகஸ்ரநாம் அர்ச்சனை நடக்கிறது. தொடர்ந்து, விசேஷ அபிஷேகம் சிறப்பு அலங்காரம் மற்றும் சங்கட நிவாரண ஹோமம், மகா தீபாராதனை மதியம் 2:.30 மணிக்கு நடைபெறும்.