சீனிவாச பெருமாளுக்கு திருமஞ்சனம் பாலாபிஷேகம்
ADDED :3379 days ago
வேலூர்: வேலூர் அருகே சீனிவாச பெருமாளுக்கு திருமஞ்சனம், பாலாபிஷேகம் நடந்தது. வேலூர் தோட்டப்பாளையம், அருகந்தம் பூண்டி பெரிய தெருவில் உள்ள சீனிவாச பெருமாள் பஜனை கோவிலில், உலக நன்மைக்காக, சீனிவாச பெருமாளுக்கு, திருமஞ்சனம் மற்றும் பாலாபிஷேகம் நேற்று நடந்தது. இதற்காக, செல்வ கணபதி கோவிலில் இருந்து, 108 பால் குடம், திரு மஞ்சன நீர் குடத்துடன் பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து சென்றனர். இதையடுத்து பாலாபிஷேகம் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை, பஜனை கோவில், ஆண்டாள் பக்த சபா நிர்வாகிகள் செய்திருந்தனர்.