படவேட்டம்மன் கோவிலில் அபிஷேகம்!
ADDED :5127 days ago
திருத்தணி: படவேட்டம்மன் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு நேற்று மகா அபிஷேகம் நடந்தது. திருத்தணி மடம் கிராமத்தில் உள்ள படவேட்டம்மன் கோவிலில், நவராத்திரி விழாவை முன்னிட்டு நேற்று மகா அபிஷேகம் நடந்தது. விழாவை முன்னிட்டு மூலவர் அம்மனுக்கு பால், பன்னீர், தேன், விபூதி மற்றும் அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை 4 மணிக்கு, திரளான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். இரவு 7 மணிக்கு விளக்கு பூஜைகள் நடந்தன. இதற்கான ஏற்பாடுகளை மடம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.