பழநிகோயிலில் ஐப்பசி கார்த்திகை பெருவிழா!
ADDED :3299 days ago
பழநி: பழநிகோயிலில் திருமுருக பக்தசபா சார்பில் ஐப்பசி கார்த்திகை பெருவிழா நடந்தது. திருக்கார்த்திகை விழாவை முன்னிட்டு திருஆவினன்குடி கோயிலில் உச்சிகால பூஜையில் குழந்தை வேலாயுதசுவாமி, சனிபகவான், தெட்சிணாமூர்த்தி, லட்சுமி, அக்னி, காமதேனு, சூரியன், பூமாதேவி ஆகியோருக்கு வெள்ளிக்கவசம் சாத்தி சிறப்பு பூஜைகள் நடந்தது. பழநிமலைக்கோயிலில் ஞானதண்டாயுதபாணிக்கு அபிஷேகம், பூஜை செய்யப்பட்டது. மாலை 6 மணிக்கு 108 திருவிளக்கு பூஜையில் பெண்களுக்கு தாலிக்கயிறு, மஞ்சள், குங்குமம் வழங்கபட்டது. ஏற்பாடுகளை திருமுருகபக்தசபா நிர்வாகிகள் செய்தனர். இரவு தங்கரதப் புறப்பாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.