உலக நன்மை, மழை வேண்டி மஹா ருத்ராபிஷேக ஹோமம்
ADDED :3378 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த புலவன்பாடி கிராமத்தில் உள்ள காமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரர் கோவிலில், நேற்று முன்தினம், உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும், அகன்யாச பூர்வக ஏகாதச மஹா ருத்ராபிஷேக ஹோமம் நடந்தது. இதில், 11 விதமான பாராயணங்களும், 121 ருத்ரங்களை கூறி பல்வேறு மூலிகைகள், திரவியங்கள் கொண்டு, யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் கலசங்களை, வேத மந்திரங்கள் ஓத ஊர்வலமாக கொண்டு சென்று, மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.