தமிழக முதல்வர் நலம் பெற வேண்டி விடிய விடிய நடைபெற்ற யாகம்!
நாகை : சீர்காழி அடுத்த திருவெள்ளக்குளம் என்றழைக்கப்படும் அண்ணன் பெருமாள் கோயில் கிராமத்தில் ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோயில் அமைந்துள்ளது. திருமங்கை யாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டதும், 108 திவ்யதேச வைணவ தலங்களில் 39 வது திருத்தலமுமாக இது திகழ்கிறது. இத்தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமாள் திருப்பதி ஏழுமலையானுக்கு அண்ணணாக போற்றப்படுகிறார். அதனால் இவ்வூர் அண்ணன் பெருமாள் கோயில் என்றே அழைக்கப்படுகிறது. இத்தலத்தில் யாகம் நடத்தி பெருமாளை சேவி த்தால் எம பயம் நீங்கி, நீண்ட ஆயுலை பெறுவர் என்பது ஐதீகம். இத்தகைய புகழ்பெற்ற அண்ணன்பெருமாள் கோயிலில் மாவட்ட அதிமுக சார்பில் தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெறவேண்டி சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. இதனை முன்னிட்டு மண்டபத்தில் ஸ்ரீ சியாமா தேவியை எழுந்தருள செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
தொடர்ந்து கிடாரங்கொண்டான் வேத சுவாமிநாதன் சுவாமிகள் தலைமையில் 12வேத விற்பனர்கள் மந்திரங்கள் ஓத, 336 வகையான பூக்கள், பழங்கள் மற்றும் மூலிகைகளை கொண்டு ஸ்யா மா தேவி தசமஹா வித்யா மஹா யாகம் நடைபெற்றது. கடந்த 15ம் தேதி துவங்கி 5நாட்கள் நடத்தப்பட்ட இந்த சிறப்பு யாகம் இன்று அதிகாலை முடிவடைந்தது. இதனையடுத்து மஹா பூர்ணாஹுதி மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து ஸ்ரீ சீனிவாசபெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. நேற்று இரவு முதல் விடிய, வி டிய நடைபெற்ற யாகத்தில் அமைச்சர் ஒ.எஸ்.மணியன் உள்ளிட்ட திரளான அதிமுகவினர் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். முன்னதாக 2,000 பெண்களுக்கு அமைச்சர் புடவை கள் வழங்கினார்.