முதல்வர் ஜெ., நலம்பெற வேண்டி மாவட்ட அ.தி.மு.க., பிரார்த்தனை
விழுப்புரம்: தமிழக முதல்வர் ஜெ., பூரண நலமடைய வேண்டி, சிறப்பு பிரார்த்தனை நடந்தது. விழுப்புரம் கிழக்கு பாண்டிரோடு வள்ளலார் அருள்மாளிகையில், முதல்வர் ஜெ., பூரண நலமடைய வேண்டி, வடக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. மாவட்ட செயலாளர் டாக்டர் லட்சுமணன் எம்.பி., தலைமை தாங்கினார். விழுப்புரம் எம்.பி., ராஜேந்திரன், எம்.எல்.ஏ., சக்கரபாணி, மாவட்ட துணை செயலாளர் அற்புதவேல், நகர செயலாளர் பாஸ்கரன் முன்னிலை வகித்தனர். இதில், முதல்வர் ஜெ., நலம்பெற சிறப்பு பிரார்த்தனை நடந்தது. பின், மாவட்ட அ.தி.மு.க., சார் பில் அன்னதானம் வழங்கப்பட்டது. மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் முரளி ரகுராமன், மாவட்ட கவுன்சிலர் செங்குட்டுவன், மாணவரணி செயலாளர் ராமசரவணன், அண்ணா தொழிற் சங்க செயலாளர் துரைசாமி, வழக்கறிஞர் அணி செயலாளர் கொடுமுடி சேரலாதன், ஜெ., பேரவை இணை செயலாளர் செந்தில்குமார், ஒன்றிய செயலாளர்கள் முருகன், முத்தமிழ்செல்வன், ராமதாஸ், விநாயகமூர்த்தி, புண்ணியமூர்த்தி, முன்னாள் நகர செயலாளர் நுார்முகமது, ஒன்றிய பேரவை செயலாளர் சரவணகுமார், பொதுக்குழு உறுப்பினர் எசாலம் பன்னீர், தொழிலதிபர் சுப்ரமணியன், கவுன்சிலர்கள் மணவாளன், பாபு, ஆதிலட்சுமி, வேங்கடபதி, புஷ்பலதா, இலக்கிய அணி செயலாளர் திருப்பதி பாலாஜி, பேரவை நகர துணை செயலாளர் ரவீந்திரன், ஒன்றிய பேரவை செயலாளர் ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.