பழவேற்காடு முகுந்தம்மன் கோவிலில் குடமுழுக்கு
ADDED :3315 days ago
பழவேற்காடு: பழவேற்காடு, முகுந்தம்மன் கோவிலில், மகா குடமுழுக்கு விழா மற்றும், அபிஷேக ஆராதனைகள் சிறப்பாக நடந்தன. பழவேற்காடு, கிளை நுாலகம் அருகில், முகுந்தம்மன் கோவில் உள்ளது. கோவில் திருப்பணிகள் முடிந்து, நேற்று காலை, 10:00 மணிக்கு, அம்மன், விநாயகர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு திருக்குட முழுக்கு நன்னீராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. காலை, 10:00 மணிக்கு, கோவில் விமான கோபுரத்தின் மீதும், காலை, 10:45 மணிக்கு, முகுந்தம்மன், விநாயகர் மற்றும் பரிவார மூர்த்தி சன்னிதிகள், கோபுர கலசங்கள் மீதும் புனிதநீர் ஊற்றி குடமுழுக்கு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, சிறப்பு அபிஷேக தீபாராதனைகள் நடைபெற்றன. இதில், பழவேற்காடு மீனவ கிராமங்களைச் சேர்ந்த நுாற்றுக்கணக்கான பக்தர்கள் திரளாக பங்கேற்று, முகுந்தம்மனை வழிபட்டு சென்றனர்.